என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்"
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியின் கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், 117 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இவரது சதத்தின் உதவியுடன் வங்கதேச அணி 222 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார். முதலில் களத்தில் இருக்கும் நடுவருக்குக் குழப்பம் வரவே, முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.
இருப்பினும் வங்காளதேச ரசிகர்கள் நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டார், இதுவே தங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என புலம்பி வந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அதில், ’டியர் ஐசிசி, கிரிக்கெட் ஜெண்டில்மேன்கள் விளையாடும் விளையாட்டு இல்லையா ?. இது எப்படி அவுட் என்று கூறுங்கள். தவறாக அவுட் வழங்கிய நடுவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த உலகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் இணையதள பக்கங்கள் மீண்டும் மீண்டும் முடக்கப்படும். இந்திய சகோதர சகோதரிகளே, உங்களை அவமானப்படுத்தும் நோக்கில் நாங்கள் இதை நாங்கள் செய்யவில்லை. உங்கள் அணிக்கு இப்படி ஒரு அநீதி நடந்தால் உங்களது உணர்வுகள் எப்படி இருக்கும் என நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதற்காக இறுதி வரை நாங்கள் போராடுவோம்’ என முடக்கப்பட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Liton Das was clearly not out
— Vijay Salgaonkar (@connect2ns) September 28, 2018
Conspiracy against Bangladesh
BCCI = ICC
REST IN PIECE CRICKET#INDvBAN#AsiaCupfinalpic.twitter.com/E9FAU9YOw6
கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த சி.எஸ்.ஐ சைபர் போர்ஸ் எனும் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இத்தனைக்கும், ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஓய்வில் இருந்தார் ரோகித் சர்மா தான் கேப்டனாக அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #AsiaCup2018 #LitonDas
துபாய்
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-ஆசிய கோப்பை போட்டித் தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இருந்தது. இந்தப் போட்டித் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதற்கு நல்ல வெகுமதி கிடைத்தது. வீரர்களின் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றோம். அனைத்து வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் கோப்பையை வென்று இருக்க முடியாது. எல்லா பெருமையும் அவர்களை சேரும்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கள் (நடுவரிசை வீரர்) நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடியது முக்கியமானது. அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம் அருமையானது.
அதோடு வங்காளதேச அணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் 10 ஓவரில் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். பந்து பழசாகிவிட்டால் எல்லாம் மாறும் என்று தெரியும். ரசிகர்களும் திரளாக வந்து தங்களது சிறப்பான ஆதரவை அளித்தார்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.
வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.
அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.
இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.
சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.
இதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.
இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.
ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். #AsiaCup2018 #INDvBAN
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தங்களது இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறின.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டான் தாஸ், நுஸ்முல் ஹூசைன் ஆகியோர் 5.1 வது ஓவர்களுக்குள் தலா 7 ரன்களுடன் வெளியேறினர். இதனையடுத்து வங்காளதேச பேட்ஸ்மேன்கள் வலுவான கூட்டணியை அமைக்க இந்தியா அனுமதிக்கவில்லை.
வங்காளதேசத்தின் முன்னணி வீரர்களை இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி அவுட்டாக்கியதால் அந்த அணி 101 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மோர்டசாவும், மெஹிதி ஹசனும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடியால் வங்காளதேசம் அணி 170 ரன்களை கடந்தது.
இறுதியில், வங்காளதேசம் அணி 49.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்களும், மோர்டசா 26 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும்
களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
அணியின் எண்ணிக்கை 61 இருந்த போது ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் தவான், எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 47 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 40 ரன்களை குவித்தார். ராயுடு 13 ரன்களின் ரூபல் ஹூசய்ன் பந்தில் விக்கெட்கீப்பர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய தோனி 3 விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார், இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.
இருப்பினும் வெற்றிக்கு 4 ரன்களே எஞ்சியிருந்த நிலையில் மோர்டாசா வீசிய பந்தை சிக்சருக்கு விரட்ட நினைத்தார் தோனி, ஆனால் அதை எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்த மிதுன் கேட்ச் பிடித்தார். இதனால், தோனி 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி 36.2 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 83 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்காளதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன், ரூபல் ஹூசைய்ன் மற்றும் மோர்டாசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். #AsiaCup2018 #BANvIND #INDvBAN
இன்று சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்